30ம் தேதி விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை, ஆக. 22: இம்மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் வரும் 30ம் தேதி மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
× RELATED நாயர்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி