பாலக்காடு அருகே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி சாவு

பாலக்காடு, ஆக 22:  பாலக்காடு அருகே தனியார் பள்ளி வேனின் பின்சக்கரத்தில் சிக்கி  3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே லக்கிடியை சேர்ந்தவர் தீபா. இவரது மூத்த மகள் ஆரியாபத்திரிப்பாலாவிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். இதில் ஆரியா தனது பள்ளிக்கு தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம்  பள்ளி வேனில் வந்த ஆர்யாவை அழைத்து வர தீபா வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்த அவரது இரண்டாவது மகள் ஆரதியா(3) வேனின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது பள்ளி வேன் ஓட்டுனர் பிரதீப்குமார்(54) வேனை பின்புறம்  இயக்கிய போது வேன் ஆர்யா மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கிழே விழந்த ஆர்யா மீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ஆர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: