×

மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை

காங்கயம், ஆக. 22: வெள்ளகோவிலில் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெள்ளகோவிலை சேர்ந்த 5ம் வகுப்பு படித்து வந்த தேவிபிரசாத் (10) என்ற மாணவன் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய, உடுமலை அடுத்த ஜல்லி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (48) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு பிரவீன்குமார் தீர்ப்பு வழங்கினார்.

Tags :
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது