பெரியார் விருது பெற அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஆக. 22: தந்தை பெரியார் விருது பெற அக்.10ம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். 2019ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertising
Advertising

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சி, அந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் தயார் செய்ய வேண்டும். அவற்றை அக்டோபர் 10ம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: