ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம், ஆக.22: ஆசனூர் அருகே நெல் மூட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் கே.ஆர்.நகரில் இருந்து நெல் மூட்டை பாரம் ஏற்றிய லாரி கேரளா மாநிலம் பாலக்காடு செல்வதற்காக நேற்று அதிகாலை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்தது. லாரியை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டிரைவர் ரவி (40) ஓட்டினார். கிளீனர் சரவணக்குமார் உடனிருந்தார். தமிழக-கர்நாடகா எல்லை அருகே  லாரி சென்றபோது  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: