×

செப்.2ல் சதுர்த்தி விழா

ஈரோடு, ஆக.22:  ஈரோடு சக்தி விநாயகர் கோயிலில் செப்.2ம் தேதி சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு முனிசிபல்காலனியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்தாண்டும் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2ம் தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு தங்க கவசம் சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது