சத்தியமங்கலத்தில் ராம்ராஜ் காட்டன் 99வது கிளை திறப்பு

சத்தியமங்கலம், ஆக.22: சத்தியமங்கலத்தில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் 99வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மைசூர் டிரங்க் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்ட ஷோரூம் கிளை திறப்பு விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார்.

பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். முதல் விற்பனையை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் துவக்கி வைக்க அதை கே.ஜி.ஆர். டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கோபால், சாரு மெட்ரிக் பள்ளி தாளாளர் சாமியப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்பு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 99வது கிளையை துவங்கி உள்ளோம். அனைவரும் நமது பாரம்பரிய உடையான வேட்டி அணிய வேண்டும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் தெரிவித்தார்.

Tags :
× RELATED கனரா வங்கி சார்பில் இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி