பூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு

இடைப்பாடி, ஆக.22: பூலாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் செண்டுமல்லி பூக்கள் விலை சரிந்துள்ளது. இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, ஓனாப்பாறை, காசிக்காடு, வன்னியர் நகர், மூலப்பாறை, கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பூக்கள் பறித்து வெளி மாவட்டங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஒரு கிலோ ₹50 முதல் ₹60க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால், செடிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக, பூக்கள் போதிய வளர்ச்சியடையாமல் சிறியதாக உள்ளது. இதனால் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இதில் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 20 என வாங்குகிறார்கள். இதனால், செடிகளில் பூக்களை சரிவர பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: