ஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்

வாழப்பாடி, ஆக.22: அயோத்தியாபட்டணம்-ஏரிக்காடு வழி தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்தை மீண்டும் இயக்கவேண்டும் என முதல்வரிடம், முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்துள்ளார். வாழப்பாடியில், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னால் கவுன்சிலர் விஜயகுமார் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சேலத்திலிருந்து அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு நொச்சி பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், சில வருடமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அயோத்தியாப்பட்டணம்-ஏரிக்காடு வழி தடத்திலும், ராம்நகர், ஏரிக்காடு, நசிபட்டி, பெரிய கோபுரம் வரை தினமும் காலை 9 மணி மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணி இரவு 8 மணி ஆகிய 4 முறை பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தாரமங்கலம் அருகே மானத்தாள்...