கபடி போட்டியில் அரசு பள்ளி சாதனை

திருச்செங்கோடு, ஆக.22: திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவில் நடந்த கபடிப் போட்டியில், அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி திடலில், மாணவிகள் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது. இதில், 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள், 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் வட்ட அளவில் முதலிடம்  பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். போட்டியில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை, தலைமை ஆசிரியை கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லோகநாதன், கிராம கல்விக்குழு தலைவர் விஜயலட்சுமி லோகநாதன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Tags :
× RELATED கடன் பிரச்னையால் வெள்ளிப்பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை