ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

நாமக்கல், ஆக.22:  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.  கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து, குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க கோருதல், விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்த வேண்டும். பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பயன்கள், சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர்கள் வேலாயுதம், மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், நந்தகுமார், நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் சுப்புலட்சுமி, பயிற்சி துணை கலெக்டர் பிரேமலதா, அரசுத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கபிலர்மலையில் தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க பயிற்சி