புதுச்சத்திரம் வட்டாரத்தில் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

சேந்தமங்கலம், ஆக.22:  புதுச்சத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சத்திரம் வட்டாரத்தில் பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டத்தில், விவசாயகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் ஆதார் நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை கொண்டு, பொது சேவை மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 60 வயதிற்கு பிறகு மாதம் ₹3 ஆயிரம் வீதம், இத்திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகம்