×

நாமக்கல் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், ஆக.22: நாமக்கல் பகுதியில் மழை பெய்ய வாயப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை:நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், வரும் 3 நாட்களும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் ஓரளவு காணப்படும். இதனால் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். நாமக்கல்லில் 10 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். தற்போது, மிதமான மழை காணப்படுவதால், கோழிகளில் தீவன எடுப்பு இயல்பாக இருக்கும். தொடர்மழையால் கோழிப்பண்ணைகளில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த புற்களில் ஈக்கள் பதுங்கி, அவை அதிகரிக்க வழிவகுப்பதுடன், கோழிப்பண்ணையின் சுகாதாரத்தையும் கெடுத்து விடும். எனவே, உடனுக்குடன் பண்ணைகளில் இருக்கும் புற்களை நீக்கி விடவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு