×

ஆட்டோ டிரைவர்கள் மோதலுக்கு போலீசார் சுமூக தீர்வு

நாமக்கல், ஆக.22: நாமக்கல் நகரில் ஆட்டோக்களை இயக்குவதில், திருச்சி ரோடு மற்றும் துறையூர் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. திருச்சி சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்தி கொள்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக டிஎஸ்பி காந்தி ஆட்டோ டிரைவர்களை அழைத்து எச்சரித்தும், தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. மேலும், திருச்சி ரோட்டில் வரும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகளை சேர்ந்த டிரைவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், நடுரோட்டில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர்கள் சதீஸ்(26), பிரபாகரன் 23) ஆகிய இருவரை நாமக்கல் எஸ்ஐ பூபதி கைது செய்தார்.

உடனடியாக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நகரில் விதிமுறை மீறி இயக்கப்பட்டு வந்த 7 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்கள் இடையே இருந்து வந்த மோதல் தற்போது சமாதானத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து நேற்றிரவு நாமக்கல் டவுன் எஸ்ஐ பூபதி முன்னிலையில், திருச்சி ரோடு ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த சங்க நிர்வாகி கென்னடி, துறையூர் ரோடு நிர்வாகி சவுந்தர்ராஜன் ஆகிய இருவரும் 50 ஆட்டோ டிரவைர்களுடன் போலீஸ் ஸ்டேசன் வந்தனர்.  அப்போது, இரு தரப்பினரும் இனிமேல் மோதல் போக்கில் ஈடுபட மாட்டோம். பிரச்னைக்குரிய திருச்சி ரோடு ஆட்டோ ஸ்டாண்டில், சாலை மாறி ஆட்டோக்களை இயக்கமாட்டோம் என்றும் எழுதி கொடுத்தனர். இதையடுத்து எஸ்ஐ பூபதி, திருச்சி ரோடு காவல்நிலையம் முன் 2 ஆட்டோக்களை மட்டுமே நிறுத்தி வைக்கவேண்டும் என தெரிவித்தார். இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால், கடந்த பல மாதமாக நீடித்து வந்த ஆட்டோ டிரைவர்கள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு