திருமாவளவன் பிறந்த நாள் விழா

ஓசூர், ஆக.22: ஓசூர் ஒன்றியம் சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பியின் 57வது பிறந்த நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திண்ணூர் அருகே, பெசோ குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பிரியாணி, இனிப்பு, பாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய வடக்கு செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் முரசுநாடு நன்னன், மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜா, வணிகர் அணி தேவராஜ், கல்வி பொருளாதாரம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரகு, மகேஷ், பால்ராஜ், பெசோ நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளி:  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பியின்  57வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று  காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம்  சார்பில், பாரூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பால், பழம்,  ரொட்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்  திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், நிலவன்,  பொருளாளர் மாதேஷ், துணைச் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இதில் விவேகானந்தன், நவீன்குமார், முருகன், பால்ராஜூ,  பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி