ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பு

ஓசூர், ஆக.22:  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு ஜோதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த ராஜீவ் நினைவு ஜோதியை தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் டிவிஎஸ் தொழிற்சங்க தலைவரும் ஐஎன்டியுசி அகில இந்திய அமைப்பு செயலாளருமாகிய குப்புசாமி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோதியை வரவேற்று சிறப்பித்தனர். அதை தொடர்ந்து, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்ற நினைவு ஜோதி அங்கிருந்து புறப்பட்டு அனைத்து மாநிலங்களும் சென்று, இறுதியாக நேற்று அதிகாலை தலைநகர் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஐஎன்டியுசி செயலாளர் குப்புசாமி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஜோதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், ஐஎன்டியுசி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு