தளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தேன்கனிக்கோட்டை, ஆக.22:  தேன்கனிக்கோட்டை தளி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆச்சுபாலு கிராமத்தில் அட்மா திட்டத்தில் திறன் மேம்பாட்டு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, மானிய திட்டங்கள் மற்றும் விவசாயிகள் ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் தாரணி பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து விளக்கி பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் தசரூபன் சொட்டுநீர் பாசனம் குறித்தும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா விதை நேர்த்தி செய்யும் முறை பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீநாத் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்,

Tags :
× RELATED காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு