ஓசூரில் பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்

ஓசூர், ஆக.22: ஓசூர் பஸ் நிலையத்தில் அதிக ஒலி எழுப்பி வந்த பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணீதர் ஆகியோர் நேற்று ஓசூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் 28க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி