வேப்பிலைப்பட்டியில் உரம் தயாரிப்பு நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

கடத்தூர், ஆக.22: கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டியில், உரம் தயாரிப்பு நிலையத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடத்தூர் அருகே கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என ஊராட்சி சார்பில் தரம் பிரித்து, மண்புழு உரம் தயாரித்து,  விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பு நிலையம் கட்டப்பட்டது.

தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், மண்புழு தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்கும் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் உரம் தயாரிக்கும் பணியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருதய...