×

விளையாட்டு மைதானத்தில் மின்விளக்கு வசதி தேவை

அரூர், ஆக.22: அரூர் அரசு பள்ளி மைதானத்தில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை மற்றும் மாலை ேநரங்களில், சுற்றுவட்டாரத்ைத சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மொரப்பூர், கொளகம்பட்டி சாலைகளில் நடைபயிற்சி செய்து வந்தவர்கள் சிலர், செயின்பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களால் அப்பகுதிகளை தவிர்த்து விட்டு, அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அதிகாலை 4 மணியளவிலும், இரவு 7 மணியளவிலும் நடை பயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். இந்நிலையில், மைதானத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், நடை பயிற்சிக்கு வருபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, விளையாட்டு மைதானத்தில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்