கட்டி முடித்தும் திறக்கப்படாத அரூர் தாலுகா அலுவலகம்

அரூர், ஆக.22: அரூர் அருகே கச்சேரிமேட்டில், பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும்  தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, 2.34 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கடந்த ஓராண்டிற்கு முன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தற்காலிகமாக அரூர் சந்தைமேடு பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே காணப்படுகிறது. எனவே, தாலுகா அலுவலகத்தை திறக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தர்மபுரி நகரில் திருப்பத்தூர்...