அஷ்டமி பெருவிழா

தர்மபுரி, ஆக.22: அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், அஷ்டமி பெருவிழா நாளை(23ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனஆகர்ஷண குபேர யாகம், அதிருத்ர யாகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.  இதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், 4 வேத பாராயணம், சிறப்பு உபசார பூஜைகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குருதியாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் மா மரங்களில் பூத்து குலுங்கும் மா பூக்கள்