விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி கிலோ 15க்கு விற்பனை

தர்மபுரி, ஆக.22: தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், தர்மபுரி நகரில் நாட்டு தக்காளி கிலோ 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் தக்காளி 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி பாலக்கோடு, ஜக்கசமுத்திரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, இண்டூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி ைவக்கப்படுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக தர்மபுரி நகரில் வேன் மூலம் நாட்டுத்தக்காளி கிலோ 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ராயக்கோட்டை பகுதியில் இருந்து நாட்டு தக்காளி கொண்டு வந்து, கிலோ 20க்கு விற்பனை செய்து வந்தோம். தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வரத்து அதிகரித்து கிலோ 15க்கு விற்பனை செய்கிறோம்,’ என்றார்.

Tags :
× RELATED தர்மபுரி நகரில் திருப்பத்தூர்...