பொதுமக்கள் பாராட்டு குறுவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி இறுதிப்போட்டி இன்று நடக்கிறது

பெரம்பலூர், ஆக. 22: பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த 15 பள்ளிகளின் கால்பந்து அணிகள் பங்கேற்றது. இதில் பெண்களுக்கு 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கு 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மட்டும் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து 2ம் நாளான நேற்று ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளுக்கான போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் இருந்து 17 கால்பந்து அணிகள் பங்கேற்றது. போட்டிகளுக்கான தொடக்க விழாவில் குறுவட்ட செயலாளரான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இருப்பினும் நேற்றே முடிக்க வேண்டிய கால்பந்து போட்டிகள் தொடர்மழை காரணமாக தடைபட்டது. இதைதொடர்ந்து விடுபட்ட இறுதிப்போட்டிகள் இன்று (22ம் தேதி) நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.

Tags :
× RELATED கவிஞர் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா...