வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

பெரம்பலூர்,ஆக.22: பெரம் பலூர் மாவட்ட வேலைவாய் ப்புத்துறை அலுவலகத் தின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வரு மான உச்சவரம்பு உயர்த் தப்பட்டுள்ளது .இது குறி த்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து, தொடர்ந்து புதுப் பித்தல் செய்து ஐந்தாண்டு களுக்கு மேல் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை மூன்றாண்டுகளு க்கு வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்குத் தாய், தந்தை அல்லது கண வர் அல்லது மனைவி ஆகி யோரின் ஆண்டு வருமா னம் ரூ50ஆயிரத்திலிருந்து ரூ72ஆயிரத்திற்கு வரு மான உச்சவரம்பை உயர் த்தி தற்பொழுது தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.  இதனை பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவுசெய்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...