குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 கேட்டு ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்

அரியலூர், ஆக. 22: குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஏஐடியூசியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அரியலூர் நகராட்சி ஏஐடியூசி செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். பொது செயலாளர் தண்டபாணி, உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரத்துக்கும் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை காவலர்களுக்கும் வழங்க வேண்டும்.அரியலூர் நகராட்சியில் பணிக்காலத்தில் உயிரிழந்த கந்தசாமி,மாரிமுத்து, பிச்சை ஆகியோரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச மனையுடன் வீடு கட்டித்தர வேண்டும். தரமான மருத்துவ வசதி வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் உலகநாதன் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்