இடையத்தான்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர், ஆக. 22: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் னிவாசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா முன்னிலையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.இதேபோல் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை ஹேமலதா தலைமையில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சிங்காரவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைசெல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பங்கேற்றனர்.

Tags :
× RELATED கவிஞர் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா...