வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்

பெரம்பலூர், ஆக. 22: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி யில் புதிதாகத் தொடங்கியு ள்ள பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல் பாடப்பிரிவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்கனவே பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம் வணிகவியல், பிபிஏ வணிக நிர்வாகவியல், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல் உள்ளிட்ட 8 இளநிலை பட்ட வகுப்புகளும், எம்ஏ தமிழ், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 2 முதுநிலை பட்ட வகுப்புகளும் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு நடப்பாண்டு பிஎஸ்சி விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடப்பிரிவுகளை புதிதாக துவங்க அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சேகர் தெரிவித்திருப்பதாவது: 2019-2020ம் கல்வியாண்டில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி தாவரவியல் ஆகிய 2 புதிய பாடப்பிரிவுகள் துவங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.

Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...