×

வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் காடுகள், மரம் வளர்ப்பு பயிற்சி முகாம்

தா.பழூர், ஆக. 22: சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வேளாண் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவியில் வருமானம் தரும் வேளாண் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய பயற்சி நடந்தது. மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா வரவேற்றார். மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பேசினார். அதில் வேளாண் அறிவியல் மைய செயல்பாடு மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் எவ்வாறு வருமானம் பெறலாம். இதனால் விவசாயிகள் மலர் சாகுபடி மூலம் நாள் வருமானமும், காய்கறி சாகுபடி மூலம் வார வருமானமும், வேளாண் பயிர்கள் மூலம் மாத வருமானமும், வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் ஆண்டு வருமானம் பெறலாம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் (பொ) சரவணன் பங்கேற்று வேளாண் காடுகள் என்றால் என்ன, மரங்களின் வகைகள், மரங்கள் வளர்ப்பு முறை மற்றும் பயன்பாடு, விற்பனை முறை பற்றி விரிவாக எடுத்துரைத்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜா ஜோஸ்லின், திருமலைவாசன், ராஜ்கலா ஆகியோர் அரியலூர் மாவட்டத்திற்கு ஏற்ற மரவகைகள் குறித்து எடுத்துரைத்தனர். பயிற்சியில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், சென்னை, விழுப்புரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். பயிற்சியின் நிறைவாக விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர் சோபனா நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...