×

இருளில் மூழ்கிய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அவதி

கரூர்,ஆக.22:கரூர் காந்திகிராமம் அடுத்துள்ள சணப்பிரட்டி அருகே ரூ.269 கோடி மதிப்பில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
 மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பலர், கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திடீரென்று மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகள் அறையை விட்டு வெளியே வந்து நீண்ட நேரம் நின்று சிரமப்பட்டதோடு, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 9 மணியளவில் மின்சப்ளை வந்ததும் தங்களின் அறைகளுக்கு சென்றதாகவும் இந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, துறை அதிகாரிகள் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் .

Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்