இரட்டை வாய்க்கால் பாலத்தின் கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கரூர்,ஆக.22: கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை அருகேயுள்ள இரட்டை வாய்க்கால் மினி பாலத்தின் கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் பாலம் அமைக்கப்பட்டு, இதன் வழியாக, லைட்ஹவுஸ் கார்னர், மக்கள் பாதை போன்ற பகுதிகளில் இருந்து காமராஜ் சாலை, மேட்டுத்தெரு, மாரியம்மன் கோயில், வஞ்சியம்மன் கோயில், மாவடியான் கோயில் தெரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.
பாலத்தின் இருபுறமும் இரும்பிலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகனம் ஒன்று, தடுப்பு கம்பி மீது மோதிய விபத்தில் கம்பி சரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இதன் வழியாக செல்லும் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் கம்பி சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கரூரில்கிடப்பில் உள்ள சுற்றுவட்டசாலை திட்டம் செயல்படுத்தப்படுமா