கடவூர் வாய்க்காலில் தவறி விழுந்து வட்ட வழங்கல் அதிகாரி பலி

கடவூர்,ஆக.22: கடவூர் வட்ட வழங்கல் அலுவலர் வாய்க்காலில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த மேகநாதன் (49). இவர் கடந்த ஒரு வருடங்களாக கடவூர் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது பணியை முடித்துக் கொண்டு நேற்று மாலை திண்டுக்கல் அருகே சாத்தான்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்பொழுது பஸ்சை விட்டு இறங்கும் போது நிலை தடுமாறி அருகே உள்ளே வாய்க்காலில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED போலீசார் இல்லாத நேரத்தில்...