தாந்தோணிமலை அருகே பேரிகார்டு வைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கரூர்,ஆக.22: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் பிரிவு அருகே பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் புகழ்பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. தாந்தோணிமலை பிரதான சாலையில் இருந்து இந்த கோயிலுக்கு இரண்டு வழிகள் பிரிகிறது. பிரதான வழியில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவுச் சாலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாத காரணத்தினால், கரூரில் இருந்து திண்டுக்கல், இதே பகுதியில் இருந்து கரூர் போன்ற பகுதிகளுக்கான வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெறுகிறது. இதன் காரணமாக, இந்த பிரிவுச் சாலையை கடந்து வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பிரிவுச் சாலை பகுதியில் இருந்து ராயனூர், பொன்நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கான முக்கிய சந்திப்பு சாலையாக இந்த பிரிவுச் சாலை உள்ளது. ஆனால், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வாகனங்கள் அனைத்தும் எளிதாக பிரிந்து செல்லும் வகையில், இந்த குறிப்பிட்ட இடத்தில் பேரிகார்டு வைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED தாந்தோணிமலை பிரதான கடைவீதியில்...