களக்காடு அருகே பைக் திருட்டு

களக்காடு, ஆக. 22: களக்காடு அருகே உள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் ராஜா (32). இவர், அப்பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். ராஜா தனது உறவினரான அம்பையை சேர்ந்த சுடலைமுத்து என்பவருக்கு சொந்தமான பைக்கை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டினருகே உள்ள அங்கன்வாடி கட்டிடம் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பைக்கின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து ராஜா, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கடையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுவைப்பு