சதுரங்க போட்டியில் வடகரை ஜாய் பள்ளி மாணவர்கள் வெற்றி

தென்காசி, ஆக. 22: ஆழ்வார்குறிச்சியில் நடந்த சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் விஷி ஆனந்த் செஸ் அகாடமி சார்பில் சதுரங்க போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஹமீதா பாத்திமா நபிஸாத், 9ம் வகுப்பு மாணவி நியாபா, 7ம் வகுப்பு மாணவி அப்ஸரா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சாலமோன், முதல்வர் புஷ்பராஜ், துணை முதல்வர் செல்வமூர்த்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: