வட்டார விளையாட்டுப் போட்டிகள் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி சாதனை

நெல்லை, ஆக. 22: வட்டார விளையாட்டு போட்டியில் எஸ்எம்ஏ மெட்ரிக். பள்ளி சாதனை படைத்துள்ளது.தமிழக கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் அடைக்கலப்பட்டினம் எஸ்எம்ஏ மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் மில்டன், சஞ்சய், ராம், சதீஷ், ராஜசேகர், கவுரிசங்கர், சாம்டோனி, ஜெயராம், ஹில்டன், மேக ஆகாஷ், நவீன்குமார், அஜேஷ்வர் ஆகியோர் எறிபந்து சீனியர் பிரிவில் வெற்றி பெற்றனர். ஜூனியர் எறிபந்து போட்டியில் மாரிசெல்வன், ராஜேஷ்வர், எஸ்.பிரவின், யூ.பிரவின், அனிஸ்டன், பெல்கின், நவின்ராஜ பிரியன், கற்குவேல், பிரதீப், சதாசிவம், பபினேஷ், நவின் திவாகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். வளைப்பந்து போட்டியில் சீனியர் மாணவியர் ஒற்றையர் பிரிவில் ரத்திகா முதலிடமும், சீனியர் மாணவியர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா மற்றும் காவ்யா முதலிடமும் பெற்றனர். ஜூனியர் மாணவியர் இரட்டையர் பிரிவில் அனிஷா மெர்லின் மற்றும் மாரிசெல்வம் முதலிடம் பெற்றனர்.

சதுரங்கப் போட்டியில் 11 வயது மாணவர் பிரிவில் நவீன்குமார் முதலிடமும், 11வயது மாணவிகள் பிரிவில் ஜானவி முதலிடமும், 14 வயது மாணவர் பிரிவில் விஜேஷ் முதலிடமும், 19 வயது மாணவிகள் பிரிவில் நிபிதா அருள் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்ராஜா, பள்ளித் தாளாளர் ராஜசேகரன், முதல்வர் மகேஸ்வரி, துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார், அகாடமிக் அட்வைசர் இன்பசேகரன், விளையாட்டு ஆசிரியர் தேவஜெகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED தென்காசி அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்