அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தாத்தா -பாட்டி தின விழா

அம்பை, ஆக. 22: அம்பை வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தாத்தா -பாட்டிகள் தின விழா கொண்டாடப்பட்டது. வேல்ஸ் வித்யாலயா கல்வி குழுமங்களின் தலைவர் முத்துசாமி  தலைமை வகித்தார். தாளாளர் வீரவேல் முருகன், இயக்குநர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யுகேஜி மாணவர் லக்ஷன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் அதீத துணிவு விருது பெற்ற தம்பதி  சண்முகவேல் - செந்தாமரை ஆகியோர் பங்கேற்றனர். தற்காப்பு விழிப்புணர்வு குறித்து சண்முகவேல் பேசினார். தொடர்ந்து தாத்தா - பாட்டிகளுக்கு கத்தரிக்காய் சேகரித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல்  போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

இதில் தாத்தா -பாட்டிகளுடன் சேர்ந்து மழலையர்களும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தாத்தா பாட்டிகளான அம்பை ராஜகோபுர திருப்பணி குழு தலைவர் வாசுதேவராஜா, ஐஎம்ஏ டாக்டர் பத்மநாபன், மாணிக்கவாசகம்,  தமிழ்செல்வி ஆகியோர் பரிசு வழங்கி பேசினர். மாணவர் லிங்கேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஆதிகேசவன், துணை முதல்வர் வசந்த், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED டீக்கடையில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் செயின் பறிப்பு