ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைப்பதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, ஆக. 22: பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைப்பதை கண்டித்து நெல்லையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்ேதாணி வரவேற்றார். அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஜெயராமன், எஸ்என்இஏ மாவட்ட தலைவர் முத்து ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஓய்வு பெறும் வயதை குறைக்கக் கூடாது எனவும் ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். என்எப்டிஇ கிளை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.
Advertising
Advertising

Related Stories: