×

முறைகேடுகளில் ஈடுபட்ட ரேஷன் ஊழியர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி, ஆக.22: தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம் வட்டத்தில் செயல்படும் 52 நியாய விலைக்கடைகளை இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படை குழு கடந்த 20ம் தேதி திடீர் ஆய்வு செய்தது. ஆய்வின் போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், சிறப்பு பொதுவிநியோக திட்ட பொருட்களான துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. அதன்படி அரிசி 128 கிலோ, சீனி 113.5 கிலோ, மண்ணெண்ணெய் 19 லிட்டர் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முறைகேடான வகையில் விற்னை செய்தது தெரியவந்தது.     மேலும் ஆய்வில் ரூ.11,275 அளவுக்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டு அபராதத்தொகை ரூ.11,275 விதிக்கப்பட்டு முறைகேடு புரிந்த விற்பனையாளர்களிடமிருந்து அபராததொகை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இத்தகவலை தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு