×

கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, ஆக.22: கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   புதுவணிகத்திற்காக அடிக்கடி மேளாக்கள் நடத்துவதையும், ஜிடிஎஸ் ஊழியர்களை மிரட்டுவதையும் நிறுத்திட வேண்டும், டர்பன் டிவைஸ் நெட்வொர்க் பிரச்னையை தீர்த்து சர்வரை அதிகரிக்க வேண்டும், டர்பன் டிவைஸ் பிரச்னை சரியாகும் வரை புள்ளிக்கணக்கு எடுப்பதை நிறுத்திட வேண்டும், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு விரைந்து பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெற்ற ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு அனைத்து பண பலன்களும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி, சங்கரன்கோவில் கோட்ட தலைவர்கள் நெல்லையப்பன், கிருஷ்ணசாமி, அணஞ்சி ஆகியோர் தலைமை வகித்தனர். பழனிமுத்து முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பூராஜா, கோட்ட பொருளாளர்கள் கோமதிநாயகம், பட்டுராஜன், பண்டாரம், மாநில சுப்ரீம் கவுன்சிலர்கள் பிச்சையா, ராஜாமணி, மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு