பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக.22: ஓய்வு பெறும் வயதை குறைப்பதை கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து தொழிற்சங்க தலைவர் முருகப்பெருமாள் தலைமை வகித்தார். அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் மரிய அந்தோணி பிச்சையா, சொர்ணராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா