எரிவாயு குழாய்களை மாற்றுப்பாதையில் பதிக்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை,ஆக.22: விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்காமல் மாற்று பாதையில் பதிக்க வேண்டுமென குலையன்கரிசல் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குலையன்கரிசல் அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி யூனியன் ஒன்றிய பொறியாளர் ஹரீஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் சார்பில் நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி தனியார் தொழிற்சாலைக்கு குலையன்கரிசல் கிராம விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்காமல் மாற்றுபாதை வழியாக கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் குலையன்கரிசல் கிராமத்தில் சாலை அமைக்கவும், கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேவையை நிறைவேற்றி தரவும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குலையன்கரிசல் ஊராட்சி செயலாளர் ரமேஷ் குமார் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி