செய்துங்கநல்லூர் வங்கியில் வாடிக்கையாளர் தினம்

செய்துங்கநல்லூர், ஆக.22: செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் தினம் நடந்தது. வங்கி மேலாளர் தேவி தலைமை வகித்தார். உதவி மேலாளர் மதன் முன்னிலை வகித்தார். காசாளர் கந்தம்மாள் வரவேற்றார்.  ஜெய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வங்கியில் அதிகமான டெபாசிட் தொகை சேர்த்தல், இன்சூரன்ஸ் உள்பட வங்கி பலன்களை மக்களுக்கு தெரிவித்தல், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தல் என முடிவு செய்யப்பட்டது. வங்கி வணிக தொடர்பாளர் பானு, நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம், மகேஷ், முருகன், சிவாஜி, பரமசிவன், தோணி அப்துல் காதர், கோதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுதாலெட்சுமி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: