வெங்கடேஸ்வரபுரம் கோகுல கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தூத்துக்குடி, ஆக.22: வெங்கடேஸ்வரபுரம் கோகுல கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து நாளை (வெள்ளி) 8 மணிக்கு ‘கண்ணன் நம் காவல்’ என்ற தலைப்பில் ஜெகந்நாத பராங்குதாசனின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 24ம் தேதி (சனி) காலை 7 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், காலை 8 மணிக்கு அன்னதானம், 10 மணிக்கு கணபதி ஹோமம், 11 மணிக்கு செண்டை மேளம் முழங்க நேமிசம் எடுத்து வருதல் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சியும், சப்பர பவனியும் நடக்கிறது.    இரவு 7.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு உறியடி உற்சவம், வாணவேடிக்கை மற்றும் இரவு பூஜை நடைபெறுகிறது.

Advertising
Advertising

Related Stories: