விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம், ஆக. 22:  விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக முக்கிய இடங்கள், கிராமங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகளும் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து மூன்றாம்நாள் விநாயகர் சிலைகள் ஊரவலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர்சதுர்த்திவிழா மற்றும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூடுதல் எஸ்பி சரவணக்குமார், டிஎஸ்பிக்கள் அஜய்தங்கம், திருமால், ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

அந்த இடங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும். விதிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் எவ்வளவு சிலை வைக்கப்படுகிறது, நீர்நிலைகளில் கரைக்க எப்போது கொண்டு செல்லப்படுகிறது என ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்ெகாள்ள வேண்டுமென எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மது, சாராயம் கடத்தலை தடுக்க புதுச்சேரி எல்லைப்பகுதியில் சோதனை மேற்கொள்ள வேண்டும். வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும். குற்றங்கள், விபத்துக்களை குறைக்க அந்தந்த காவல்நிலையங்களிலும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் காவல்துறையினர் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பரா மரிப்பு குறித்து ஆய்வு செய்த எஸ்பி ஜெயக்குமார் சுட்டிகாட்டிய குறைகளை சரிசெய்யவும் அறிவுரை வழங்கினார்.

Related Stories: