விழுப்புரம் மாவட்டத்தில் 25ம் தேதி 20,274 பேர் தேர்வு எழுதுகின்றனர்

விழுப்புரம்,  ஆக. 22:  தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 8,888 இரண்டாம் நிலை  காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த  எழுத்துத்தேர்வு வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  நடக்கிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில்  நடக்கிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணாஅரசுக்கலைக்கல்லூரி, கப்பியாம்புலியூர்  சிகாமேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசூர் விஆர்எஸ் பொறியியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை சாரதாவித்யாலயா, தியாகதுருகம்  மவுண்ட்பார்க்மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஏகேடி மேல்நிலைப்பள்ளி  மற்றும் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தெய்வானைஅம்மாள் மகளிர் கல்லூரி  ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில்  மொத்தம் 17,114 ஆண்களும், 3,160 பெண்களும் என மொத்தம் 20,274 பேர்  விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளும் இணையதளத்தில்  வௌியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் நீலநிற  அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மற்றும் எழுத்துக்கள் எதுவும் இல்லாத  பரீட்சை அட்டை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். செல்போன், கால்குலேட்டர்,  பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்ற பொருட்களை  கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று காலை 8 மணிக்கே தேர்வு  மையத்திற்கு வந்து விட வேண்டும். தேர்வு காலை 10 மணி முதல் 11.20 வரை  நடக்கிறது. மொத்தமுள்ள 100 மதிப்பெண்களுக்கு 80 மதிப்பெண்கள்  எழுத்துத்தேர்விலும், 5 மதிப்பெண்கள் என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டு பிரிவு  சான்றிதழுக்கும், 15 மதிப்பெண்கள் உடல்திறன்தேர்விலும் வழங்கப்படும்.  எழுத்துத்தேர்வில் வெற்றிபெறுகிறவர்கள் அடுத்தகட்டமாக உடல்

தகுதித்தேர்விற்கு  அழைக்கப்படுவார்கள்.

Related Stories: