பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

சின்னசேலம், ஆக. 22:  சின்னசேலம்  ரயில்நிலையம் அருகே சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த  தகவலின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், வினோத்குமார் மற்றும்  போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து  சூதாடிய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. எனினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  சின்னசேலம் பகுதியில் உள்ள சதீஷ் (28), வெங்கடேசன் (31), பானம்பூண்டி  கூட்ரோடு அண்ணாமலை (42), கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்த குப்பன்(49),  சின்னசேலம் விஜயபுரம் பிரபாகரன்(28), ராயர்பாளையம் மாயக்கண்ணன்(44),  சின்னசேலம் சின்னமுத்து(33), தர்மன்(46), பழனி(46) ஆகியோர் பணம்  வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது  செய்து, ரூ.9000 பணம் மற்றும் 65 புள்ளி தாள்களை  பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: