ஜே.எஸ்.குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை

கள்ளக்குறிச்சி, ஆக. 22:   தென்னிந்திய அளவிலான கராத்தே  சாம்பியன்ஷிப் போட்டி கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில்  கள்ளக்குறிச்சி ஜே.எஸ்.குளோபல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி மாணவிகள் சுஜித்தா, நிஷிதா  ஆகியோர் குமிட்டி பிரிவில் முதல் இடத்தையும், மாணவன் அபினேஷ் 2வது இடத்தையும், மேக்னா,  விஜயராகவன், ஜெகதீஷ் வாசுதேவ், நிர்மல்செல்வன் ஆகியோர் 3வது இடத்தையும்  பிடித்து சாதனை படைத்தனர்.சாதனை புரிந்த மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஜே.எஸ்.குளோபல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். விழாவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் கராத்தே பயிற்சியாளர் குமரேசன், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஜூவிதா, சுதா, ஆனந்த், உடற்கல்வி இயக்குநர்கள் விமல்குமார், கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Advertising
Advertising

Related Stories: