மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடக்கம்

புதுச்சேரி, ஆக. 22:  புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு காலணி தயாரிக்க பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் புதுச்சேரி கிளை மைய தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. கல்லூரி முதல்வர் உதயகுமார் வரவேற்றார். அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். கல்வித்துறை செயலர் அன்பரசு, சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: