சாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்

வில்லியனூர், ஆக. 22:     வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் பகுதியில் பாலத்தின் மீது படிந்து கிடக்கும் மணலை சுத்தம் ெசய்ய ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் தினந்தோறும் பேருந்து, லாரி, கார், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் உள்ளிட்டவை இருப்பதால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த சாலையை பயன்படுத்தி சென்றுவருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இதனால் பல சமயங்கள் விபத்துகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் ெசன்று வருகின்றன. பாலம் குறுகிய நிலையில் உள்ளதால் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை பணியாளர்கள் பாலத்தின் ஓரங்களில் உள்ள மணலை சுத்தம் ெசய்யாமல் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது மணலில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே உடனடியாக பாலத்தின் மீது சாலையோரங்களில் படிந்து கிடக்கும் மணலை சுத்தம் ெசய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: